சூடான செய்திகள் 1

03 மணித்தியாலங்களுக்கு முன்னர் வருகை தருமாறும் பயணிகளுக்கு கோரிக்கை

(UTVNEWS|COLOMBO) – நாட்டில் நிலவும் கடும் மழை காரணமாக சகல பயணிகளும் 03 மணித்தியாலங்களுக்கு முன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தினை வந்தடையுமாறு விமான நிலைய நிர்வாக பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, கடும் மழையின் காரணமாக இன்று கட்டுநாயக்க விமான நிலையத்திற்குள் விமான செயற்பாடுகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என விமான நிலைய நடவடிக்கைகளுக்கு பொறுப்பான அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கட்டுநாயக்க விமான நிலையம் மற்றும் அதனை அண்டியுள்ள பிரதேசங்களில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியால காலப்பகுதியில் 272.3 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இன்றைய வானிலை…

ஜனாதிபதி சீனாவுக்கு விஜயம்

குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 781 ஆக அதிகரிப்பு