சூடான செய்திகள் 1

24 மணித்தியாலங்களில் 200 மில்லி மீட்டர் வரையில் கடும் மழை

(UTVNEWS|COLOMBO) – எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் தென், சபரகமுவ, மத்திய மற்றும் மேல் மாகாணங்களில் 200 மில்லி மீட்டர் வரையில் கடும் மழை பொழிய கூடும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பிராந்தியங்கள் கொந்தளிப்பாக இருக்கும் என்பதால், சிறு மற்றும் ஆழ்கடல் மீனவர்களை கடலுக்கு செல்ல வேண்டாம் என கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

புத்தளம், மன்னார், காங்கேசன்துறை, பலப்பிட்டிய, காலி, ஹம்பாந்தோட்டை ஆகிய கடற்பிரதேசங்களில் மணித்தியாலத்திற்கு 55 கிலோமீற்றர் வரை காற்றின் வேகம் அதிகரிக்கும் சாத்தியமுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Related posts

கொழும்பு – தாமரை தடாகம் அருகில் முச்சக்கரவண்டியொன்றில் தீப்பரவல்

நீதிமன்றில் ஆஜரானார் விமல்!

நீதிமன்றில் சரணடைய தயாராகும் உதயங்க வீரதுங்க