(UTVNEWS|COLOMBO) – அரசாங்க நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் சஜித் பிரேமதாஸ, அகில விராஜ் காரியவசம் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டீ.எம் சுவாமிநாதனும் இன்று(23) முன்னிலையாகவுள்ளனர்.
பாடசாலை புத்தகங்களை அச்சிடும் போது அமைச்சரின் புகைப்படத்தை அதில் உள்ளடக்கியதின் ஊடாக இடம்பெற்ற மோசடி தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே , கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் இவ்வாறு ஆஜராகவுள்ளார்.
வீடமைப்பு அதிகார சபைக்கு சட்ட விரோதமான முறையில் ஆட்களை சேர்த்துக் கொண்டமையின் ஊடாக ஏற்பட்ட மோசடிகள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அமைச்சர் சஜித் பிரேமதாஸ ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகவுள்ளார்.