(UTVNEWS|COLOMBO) – அல்பேனியா நாட்டில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்களால் 68 பேர் படுகாயம் அடைந்ததாக முதல்கட்ட தகவல் வெளியானது.
அல்பேனியா நாட்டின் துறைமுக நகரான டூயுரசில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் 5.4 ரிக்டர் அளவில் பதிவானது என அமெரிக்கா புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் பல்வேறு கட்டிடங்கள் சேதமாகினதில் சிக்கி 68 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகரில் இன்று அதிகாலை 2.53 மணியளவில் 6.4 ரிக்டர் அளவில் ஏற்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.