சூடான செய்திகள் 1

குப்பை கொள்கலன்களை இடமாற்ற விதிக்கப்பட்ட தடை நீடிப்பு

(UTVNEWS|COLOMBO) – வௌிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட குப்பைகள் அடங்கிய கொள்கலன்களை நாட்டின் எந்தவொரு பகுதிக்கும் கொண்டு செல்வதை இடைநிறுத்தி பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதி வரை நீடித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் , நீதிபதி யசந்த கோத்தாகொட மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோரால் இந்த தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுகம் மற்றும் கட்டுநாயக்க விமான நிலைய பொருளாதார ஊக்குவிப்பு வலையம் ஆகிய பகுதிகளில் காணப்படும் வௌிநாட்டு குப்பைகள் அடங்கிய கொள்கலன்களிலிருந்து மாதிரிகளைப் பெற்று அறிக்கை சமர்ப்பிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம், அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு உத்தரவிட்டுள்ளது

Related posts

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், மாந்தை மேற்கு பிரதேச மக்களுக்கான சுயதொழில் ஊக்குவிப்பு அறிவூட்டல் கருத்தரங்கு!

பிணையில் வந்தவர் மீது கத்திக்குத்து தாக்குதல்

ரயில்வே பணிப் பகிஷ்கரிப்புகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை