சூடான செய்திகள் 1

ரெஜினோல்ட் குரே ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியில் அங்கத்துவம்

(UTVNEWS|COLOMBO) – வட மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் ரெஜினோல்ட் குரே நேற்று(19) ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணிக் கட்சியின் உத்தியோகப்பூர்வ அங்கத்துவத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

ஸ்ரீ லங்கா ​பொதுஜன முன்னணியின் அமைப்பாளர் பஷில் ராஜபக்‌ஷவிடம் இவர் கட்சியின் அங்கத்துவத்தைப் பெற்றுக்கொண்டார்.

இதேவேளை நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாவை வெற்றியடைச் செய்வதற்காக, வட மாகாணத்தின் சகல ஒருங்கமைப்பு நடவடிக்கைகளுக்காகவும் முன்னாள் ஆளுநர் ரெஜினோல்ட் குரே நியிமிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

எனது முன்னேற்றத்துக்கு காரணம் குலசேகர – மாலிங்க புகழாரம் (video)

நீர் வழங்கல் வாரியத்தின் முன்னாள் கணக்காளருக்கு 37 வருட கடூழிய சிறைத்தண்டனை

இலங்கையின் பதப்படுத்தப்பட்ட உணவு தொழில்துறைக்கு உலகளாவிய ரீதியில் பாரிய வரவேற்பு!