அரசியல்உள்நாடு

16 ஆண்டுகள் சிறைத்தண்டனை – நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்த முன்னாள் முதலமைச்சர் ரஞ்சித்

ஊழல் குற்றச்சாட்டில் தலா 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் ரஞ்சித் மற்றும் அவரது பிரத்தியேக செயலாளர் சாந்தி சந்திரசேன ஆகியோர் தங்கள் தண்டனைகளை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளனர்.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்துவதற்காக குறித்த மேல்முறையீடு கொழும்பு மேல் நீதிமன்றத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேல்முறையீட்டு மனுவில், உயர் நீதிமன்ற நீதிபதி தனது தீர்ப்பை வழங்கும்போது தொடர்புடைய விசாரணையில் தாங்கள் முன்வைத்த சமர்ப்பணங்களை பரிசீலனையில் எடுத்துக்கொள்ளவில்லை என மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, தொடர்புடைய குற்றச்சாட்டுகளிலிருந்து தங்களை விடுவிக்குமாறு அவர்கள் மேல்முறையீட்டு நீதிமன்றத்தை கோரியுள்ளனர்.

Related posts

ஆளும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாடு செல்ல தடை – கட்டாய உத்தவு

கர்ப்பிணித் தாய்மார்களது நலன்கருதி விஷேட தொலைபேசி இலக்கம்

கட்டுநாயக்கவிலிருந்து மெல்போர்ன் நோக்கிப் பயணிக்கவிருந்த விமானம் இரத்து

editor