சூடான செய்திகள் 1

எவன்கார்ட் வழக்கு ஒக்டோபர் 22 ஆம் திகதி வரை ஒத்திவைப்பு

(UTVNEWS|COLOMBO) – ரக்னா லங்கா தலைவராக இருந்த மேஜர் ஜெனரல் பாலித்த பெர்ணான்டோ மற்றும் எவன்கார்ட் நிறுவன தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதிக்கு எதிரான வழக்கு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 22 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

எவன்கார்ட் நிறுவன தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி மற்றும் மேஜர் ஜெனரல் பாலித்த பெர்ணான்டோ ஆகியோருக்கு எதிரான வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

கடந்த அரசாங்க காலத்தில், மிதக்கும் ஆயுதக் களஞ்சியசாலையை நடத்திச் செல்வதற்கு தேவையான நடவடிக்கைகளை செய்து கொள்வதற்கு ரக்னா லங்கா தலைவராக இருந்த மேஜர் ஜெனரல் பாலித்த பெர்ணான்டோவுக்கு 355 இலட்சம் ரூபா இலஞ்சம் வழங்கியதாக எவன்கார்ட் நிறுவன தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Related posts

அரசியலமைப்பு சபையின் விசேட கூட்டம் நாளை

நீர்கொழும்பு சிறைச்சாலை மருத்துவமனையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட கைதி

இடியுடன் கூடிய மழை