விளையாட்டு

பாகிஸ்தான் தொடரிலிருந்து விலகிய இலங்கை வீரர்களுக்கு அபராதம் – பாகிஸ்தான் முன்னாள் அணித்தலைவர்

(UTVNEWS|COLOMBO) – பாகிஸ்தான் தொடரிலிருந்து விலகியவர்களுக்கு இலங்கை கிரிக்கெட் சபை அபராதம் விதிக்க வேண்டும் என பாகிஸ்தான் முன்னாள் அணித்தலைவர் ஜாவேத் மியாண்டாத் கருத்து தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கை அணி மூன்று ஒரு நாள் போட்டிகள் மற்றும் இருபதுக்கு – 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.

முதல் ஒரு நாள் போட்டி செப்டம்பர் 27ம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், பாதுகாப்பு காரணம் காட்டி லசித் மாலிங்க உட்பட சில இலங்கை வீரர்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள மறுப்பு தெரிவித்துள்ளனர்.

எந்த இலங்கை வீரர்கள் வருகை தருகிறார்கள் என்பது முக்கியமல்ல, வருகை தரும் அணியின் தரத்தைப் பொருட்படுத்தாமல் அவர்களின் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்துவதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என பாகிஸ்தான் முன்னாள் அணித்தலைவர் ஜாவேத் மியாண்டாத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தேசிய அணிக்கு விளையாடாமல் வெளிநாட்டு இருபதுக்கு-20 தொடர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்த வீரர்கள் மீது இலங்கை கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அணி தொடர்பில் கவனம் செலுத்த வேண்டாம், தாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்த வேண்டும் என பாகிஸ்தான் முன்னாள் அணித்தலைவர் ஜாவேத் மியாண்டாத் அறிவுறுத்தியுள்ளார்.

பாதுகாப்புக் காரணங்களை முன்னிட்டு லசித் மாலிங்க, ஏஞ்சலோ மெத்தியூஸ் உள்ளிட்ட இலங்கை அணியின் சிரேஷ்ட வீரர்கள் 10 பேர் பாகிஸ்தான் கிரிக்கெட் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இரண்டாவது இருபதுக்கு – 20 போட்டி இன்று

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் இருந்து முகமது ஹஃபீஸ் நீக்கம்

சைக்கிள் பயிற்றுவிப்பாளருக்கான செயலமர்வு