சூடான செய்திகள் 1

தெற்காசியாவின் மிக உயரமான கோபுரம் இன்று திறப்பு

(UTVNEWS|COLOMBO) – தெற்காசியாவின் மிக உயர்ந்த கோபுரமாக கருதப்படும் கொழும்பில் அமைக்கப்பட்டுள்ள தாமரைக் கோபுரம் இன்று(16) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் திறக்கப்படவுள்ளது.

356 மீற்றர் உயரமான 17 மாடிகளைக் கொண்ட இந்தக் கோபுரம், 104 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

நட்சத்திர விடுதி, ஹோட்டல்கள், கேட்போர் கூடம், மாநாட்டு மண்டபம் உள்ளிட்ட பல வசதிகள் இந்தத் தாமரைக் கோபுரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, டி. ஆர். விஜயவர்தன மாவத்தையில் பேர வாவிக்கு மிக அருகாமையில் தாமரைக் கோபுரம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஓமல்பே சோபித்த தேரருக்கு மேடையில் வைத்து பதில் வழங்கிய ரிஸ்வி முப்தி (video)

பயிற்சி ஆலோசகரானார் திலான் சமரவீர

சாதாரண தரப் பரீட்சை டிசம்பர் 02 ஆம் திகதி