சூடான செய்திகள் 1

இன்றும் பெரும்பாலான மாகாணங்களில் மழையுடன் கூடிய காலநிலை

(UTVNEWS|COLOMBO) – நாட்டில் நிலவுகின்ற மழையுடனான காலநிலையில் மேலும் சில நாட்களுக்கு தொடரும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் கிழக்கு, சப்ரகமுவ, தெற்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் 150 மில்லி மீற்றருக்கும் அதிகமாக பலத்த மழை பெய்யக்கூடும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் 100 மில்லிமீற்றர் அளவில் மழை பெய்யக்கூடும்.

மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Related posts

WHATSAPP மற்றும் FACEBOOK முடக்கம்

சட்டவிரோத போதை பொருள் வர்த்தகர்களது சொத்துக்களை அரசுடைமையாக்க நடவடிக்கை

வெடிப்புச் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்ய விசேட குழு நியமனம்