சூடான செய்திகள் 1

காணமற்போன T-56 துப்பாக்கிகள் இரண்டும் மீட்பு

(UTVNEWS | COLOMBO) – பாணந்துறை வடக்கு பொலிஸ் நிலையத்தில் இருந்து காணமற்போன T-56 துப்பாக்கிகள் இரண்டும் பொலிஸாரினால் அகுரஸ்ஸ பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்திருந்தார்.

2019 ஆம் ஆண்டு ஜூலை 6 ஆம் திகதி குறித்த துப்பாக்கிகள் இரண்டும் காணாமற் போன சம்பவம் தொடர்பான விசாரணையைத் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்ட நிலையில் குறித்த 2 இராணுவ வீரர்களும் இன்று(10) கைது செய்யப்பட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட 2 துப்பாக்கிகளும் குற்றப் புலனாய்வுத் பிரிவினரிடம் தற்போது ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

தேன் எடுக்கச் சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…….

அரசியல் கட்சி உறுப்பினர்கள் – தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகள் இடையில் விசேட சந்திப்பு

மாகாண சபைத் தேர்தல் செப்டம்பர் 30ம் திகதிக்கு முன்னர்