சூடான செய்திகள் 1

சஜித் பிரேமதாசவை நாட்டு மக்கள் தெரிவு செய்து விட்டனர் – மங்கள சமரவீர [VIDEO]

(UTVNEWS|COLOMBO) – ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாசவை நாட்டு மக்கள் தெரிவு செய்து விட்டனர் என அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாசவை நாட்டு மக்கள் எதிர்பார்க்கின்றனர். மக்களின் விருப்பத்திற்கும் கோரிக்கைக்கும் அமைய கட்சி முடிவெடுத்து அவரை வேட்பாளராக நிறுத்தி வெற்றி பெற வைக்க வேண்டும் என அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவாக பதுளை, மாத்தறை என கூட்டங்கள் நடைபெற்றிருக்கின்றது. இதில் மஹிந்த ராஜபக்ஷவின் தொகுதியான குருநாகல் நகரிலும் கூட்டம் நடாத்தப்பட்டுள்ளது.

அங்கு வரலாற்றில் இல்லாதவாறு அதிக எண்ணிக்கையான மக்கள் கலந்து கொண்டிருந்தனர். அவ்வாறு செல்கின்ற இடமெல்லாம் ​சஜித் பிரேமதாசவையே மக்கள் எதிர்பார்த்து, அவருக்கே தமது அதரவையும் வழங்கி வருகின்றனர்.

“என்டர்பிரைசஸ் ஸ்ரீலங்கா” நிகழ்ச்சித் திட்டத்தின் கண்காட்சி நிகழ்வு இன்று(07) யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் மங்கள சமரவீர புகையிரதத்தில் யாழிற்கு பயணத்தை மேற்கொண்டிருந்தார்.

இதற்கமைய யாழ். புகையிரத நிலையத்தில் சென்று இறங்கிய அமைச்சர் அங்கு ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், சஜித் பிரேமதாச முன்னெடுத்த சேவைகளின் புகைப்படங்களே வட மாகாணத்திலும் காணப்படுவதை ரயிலில் பயணிக்கும் போது அவதானித்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

அவ்வாறு அவர் மக்களுக்காகச் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார். அதனால் தான் மக்கள் அவரை எதிர்பார்க்கின்றனர்.

ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் அமைச்சராக இருக்கின்ற அவரை மக்கள் தெரிவு செய்து விட்ட நிலையில் இனி அக்கட்சியினர் வேட்பாளரைத் தெரிவு செய்ய வேண்டியதில்லை என்று நான் கருதுகின்றேன் என அமைச்சர் மங்கள சமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

அலோசியஸின் சிறை கூண்டில் சிக்கிய சிம் அட்டைகள் பல குற்றங்களுடன் தொடர்பு

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை மேலும் உயர்வு

ஜனாதிபதி சீனா விஜயம்