சூடான செய்திகள் 1

விடைத்தாள் திருத்தும் பணி – 4 பாடசாலைகள் அடுத்த மாதம் திறப்பு

(UTVNEWS|COLOMBO) – 2019 ஆம் ஆண்டின் கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை விடைத்தாள்களை திருத்தும் பணியின் இரண்டாம் கட்ட நடவடிக்களுக்காக 28 பாடசாலைகளில் 4 பாடசாலைகள் மாத்திரம் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் அடுத்த மாதம் முதலாம் திகதி வரையில் முழுமையாக மூடப்படிருக்கும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த இந்த பாடசாலைகள் மீண்டும் அடுத்த மாதம் 2 ஆம் திகதி திறக்கப்படும் என தெரிவித்துள்ளது.

ஏனைய 24 பாடசாலைகள் பகுதியளவில் மூடப்பட்டு விடைத்தாள் திருத்தும் பணிகள் இடம்பெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Related posts

10 ரூபாய் குறைப்பது தொடர்பில் முச்சக்கரவண்டி சங்கங்களுக்கிடையில் கருத்து வேறுபாடு

ரயில் பணிப்புறக்கணிப்பு – இன்று விசேட அமைச்சரவைக் குழுக் கலந்துரையாடல்

பீடர் டடின் இன்று இலங்கைக்கு வருகை தரவுள்ளார்