வகைப்படுத்தப்படாத

‘சந்திரயான் 2’ விண்கலத்துடனான தொடர்பு துண்டிப்பு

(UTVNEWS|COLOMBO) – இந்தியாவின் சந்திரனை நோக்கிய ‘சந்திரயான் 2’ விண்கலத்துடனான தொடர்பை இழந்துள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான ‘இஸ்ரோ’ அறிவித்துள்ளது.

48 நாட்கள் பயணத்தின் பின்னர் சந்திரயான்-2 விக்ரம் லேண்டர் நேற்று சந்திரனில் தரை இறங்கியதையடுத்து எந்த சமிக்ஞைகளும் கிடைக்கவில்லை என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார்.

இன்று அதிகாலை 1.30 மணிக்கு விக்ரம் லேண்டரை நிலவின் மேற்பரப்பில் தரை இறங்கியது. இதையடுத்து, சுமார் 35 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து லேண்டர் நிலவை நோக்கி செல்லத் தொடங்கியது. 400 மீட்டரில் வந்த விக்ரம் லேண்டர் தரை இறங்கும் இடத்தை தேர்வு செய்து தரை இறங்கியதாக தெரிய வந்தது.

நிலவில் விக்ரம் லேண்டர் தரை இறங்கிய போது அதிக வேகத்தில் இறங்கியதாகவும் லேண்டரில் இருந்து எந்த வித சமிக்ஞைகளும் வரவில்லை எனவும் முதல் கட்ட தகவல் வெளியானது.

சந்திரயான் 2′ விண்கலத்துடனான தொடர்பு இழக்கப்பட்டமை அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

5G வலைப்பின்னலை அறிமுகம் செய்யும் தென் கொரியா…

Louis Tomlinson shuts down reports on One Direction split

முகப்பரு வராமல் தடுக்க என்ன செய்யலாம்?