(UTVNEWS | COLOMBO) – கோதுமை மாவின் விலை அதிகரிப்பினை தொடர்ந்து பாண் விலையானது இன்று(06) நள்ளிரவு ரூபா 02 இனால் அதிகரிக்கவுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் உப தலைவர் ரியன்சி விதானகே தெரிவித்துள்ளார்.
கோதுமை மாவின் விலையினை இன்று(06) நள்ளிரவு ரூபா 5 இனால் அதிகரிக்க பிரிமா தனியார் நிறுவனமானது தீர்மானித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.