விளையாட்டு

கிரிக்கெட் வரலாற்றில் 43 ஊழல்கள் – குமார் சங்கக்கார

(UTVNEWS|COLOMBO) – உலக கிரிக்கெட் வரலாற்றில் 43 ஊழல் சம்பவங்கள் பதிவாகியிருப்பதாகவும் அதில் 23 இலங்கையில் நடைபெற்றது வேதனைக்குரிய விடயம் எனவும் இலங்கையின் முன்னாள் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.

நேற்று கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

‘இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் கடந்த காலங்களில் ஊழல் மோசடிகள் அதிகமான அளவு பதிவாகியிருக்கின்றன. நாங்கள் அது பற்றி வேதனையடைகின்றோம். அது நல்லது அல்ல.  தற்பொழுது விளையாடுகின்ற அல்லது முன்னாள் விளையாடிய எந்த ஒரு வீரரும் இவ்வாறான குற்றச்சாட்டுக்களுக்கு ஆளாக விருப்பம் இல்லை.

இது பற்றி நாங்கள் வேதனைப்பட்டாலும் இவற்றை ஒரு படிப்பினையாக நாம் ஆக்கிக்கொள்ள வேண்டும். என் சி சி கழகத்துக்கு இருக்கின்ற பொறுப்புதான் இந்த படிப்பினைகள் மூலம் எதிர்காலத்தில் நாம் விளையாடுகின்ற இந்த கிரிக்கெட் விளையாட்டு கிராம மட்டத்தில் இருந்து சர்வதேச மட்டம் வரை ஊழலை இல்லாமல் செய்ய வேண்டும். இந்த பொறுப்பை நாம் அனைவரும் ஏற்க வேண்டும்” என குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.

மேலும், இது உறுதியாக நடக்க வேண்டும், இல்லையென்றால் இந்த விளையாட்டு மறித்து விடும், நான் இதனை பெரிய அளவில் பேசுவது அல்ல.

“உலகில் கிரிக்கெட் போட்டி பற்றி 43 ஊழல் மோசடிகள் பதிவாகியிருக்கின்றன. அதில் 23 இலங்கை பற்றித்தான், இந்த ஊழல் பற்றி நாடு என்ற ரீதியில் கழகம் என்ற ரீதியில் முகாமைத்துவம் என்ற ரீதியில் உறுதித்தன்மையை கட்டியெழுப்ப வேண்டும். நாங்கள் இது பற்றி விளக்கத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். இது பற்றி நம்பிக்கையூட்டும் ஒரு திட்டத்தை நாம் முன்னெடுக்க வேண்டும், இதன் மூலம் வீரர்களுக்கு பயம் எதுவும் இல்லாமல் விளையாட வழியமைக்க வேண்டும். அவர்கள் யாரும் வீரர்கள் என்ற அடிப்படையில் இந்த கலாசாரத்தில் இருந்து கீழ் விழுந்து விட கூடாது என முன்னாள் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.

Related posts

சில போட்டிகளிலிருந்து விலகிய சகலதுறை வீரர்

இலங்கை அணிக்கு புதிய வேகப் பந்து பயிற்றுவிப்பாளர் நியமனம்…

இந்தியா- நியூசிலாந்து : முதல் ஆட்டம் மழையால் பாதிப்பு