சூடான செய்திகள் 1

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு திகதி வெளியானது

(UTVNEWS | COLOMBO) –  இம் மாதம் 15ம் திகதி முதல் அடுத்த மாதம் ஒக்டோபர் 15ஆம் திகதிக்குள் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலுக்கு அழைப்பு விடுக்கப்படலாம் என தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் விரிவாக கலந்துரையாடி வருகின்றனர். அத்துடன், தேவையான ஆவணங்களையும் தயாரித்து வருகின்றனர்.

அத்துடன், 15ஆம் திகதிக்கு பின்னர் ஜனாதிபதி தேர்தலுக்கான அதிகாரபூர்வ திகதியை அறிவிக்க முடியும் எனவும் ஜனாதிபதி தேர்தல்கள் குறித்து ஆராய தேர்தல்கள் ஆணையம் எதிர்வரும் 9ம் திகதி கூடவுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

வேட்புமனு கையளிப்பு காரணமாக பலத்த பாதுகாப்பு

பிணைமுறி மோசடி அறிக்கையின் தமிழ், சிங்கள பிரதிகளை வெளியிட உத்தரவு

பொதுத் தேர்தல் திகதிக்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்யுமாறு கோரிக்கை