சூடான செய்திகள் 1

2019ம் ஆண்டு இறுதியில் செலவுத் திட்டத்தை அரசு முன்வைக்காதிருக்க தீர்மானம்

(UTVNEWS | COLOMBO) – 2019ம் ஆண்டு இறுதியில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவிருப்பதால் 2020 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை 2019 ஆம் ஆண்டில் முன்வைக்காதிருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலுக்குப் பின் பாராளுமன்றம் கலைக்கப்படுவது தொடர்பில் கட்சி தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களே தீர்மானிக்க வேண்டும் என்றும் பாராளுமன்றத்தில் பிரதமர் நேற்று(04) கூறினார்.

இதேவேளை, 2020 ஆம் ஆண்டிற்கான செலவுக்களுக்காக இடைக்கால ஒதுக்கீட்டு சட்டமூலம் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என்றும் பிரதமர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

Related posts

வாகன இறக்குமதிக்காக வெளியிடப்பட்டுள்ள புதிய வர்த்தமானி

UPDATE-ஞானசார தேரருக்கு 06 ஆண்டு கடூழிய சிறைத் தண்டனை

பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்களில் சிலர் சற்றுமுன்னர் பதவியேற்பு