சூடான செய்திகள் 1

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்கு மாதாந்தம் 6,000 ரூபா நிவாரணம்

(UTVNEWS | COLOMBO) – எதிர்வரும் 10ம் திகதி முதல் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்கு இடைக்கால நிவாரணத் தொகை ஒன்றினை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அதற்கமைய உறுதிப்படுத்தப்பட்ட காணாமற்போனோர் தொடர்பான சான்றிதழ்களைக் கொண்டுள்ளவர்களுக்கு மாதாந்தம் 6,000 ரூபா இடைக்கால நிவாரணமாக, ஒவ்வொரு மாதமும் 10 ஆம் திகதி வழங்கப்படவுள்ளது.

அந்த தினத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் வங்கி கணக்குகளில் குறித்த நிவாரண தொகை வைப்பிலிடப்படவுள்ளதாக நிதியமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

நிதி அமைச்சர் மற்றும் அரசகரும மொழி சமூக மேம்பாடு மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் ஆகியோர் கூட்டாக இணைந்து சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கே இவ்வாறு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்த்கது.

Related posts

மின்சார துண்டிப்பு தொடர்பான கால அட்டவணை இதோ…

புதிய DIG இருவர் நியமிப்பு…

லண்டன் நகரில் இருந்து வந்தவர்கள் அனைவரும் சீனர்கள் [UPDATE]