விளையாட்டு

டி20 கிரிக்கெட் – ஐவர் பிணையில் விடுதலை

(UTVNEWS|COLOMBO) – இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு- 20 கிரிக்கெட் போட்டியை பார்வையிடச் சென்றபோது, அங்கு கலகம் விளைவிக்கும் வகையில் செயற்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட 5 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பிலிருந்து பேருந்து ஒன்றில் கண்டி – பல்லேகலை மைதானத்திற்கு சென்ற 22 பேர் கொண்ட குழுவினர் அங்கு அனுமதிச் சீட்டுக்களை சோதனைக்கு உட்படுத்தியபோது, பாதுகாப்புத் தரப்பினருக்கும், அவர்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டதையடுத்து, கலகம் விளைவிக்கும் வகையில் செயற்பட்டமை காரணமாக அவர்களில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், நேற்றைய தினம் தெல்தெனிய மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, அவர்களுள் ஒருவர் 15 ஆயிரம் ரூபா பிணையில் செல்ல அனுமதிக்க்ப்பட்டுள்ளதுடன், ஏனைய நான்கு சந்தேகத்துக்குரிவர்களும் 3 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் செல்லவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Related posts

2018 பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப்போட்டியில் இலங்கை பங்கேற்பு

நாணய சுழற்சியில் இலங்கை வெற்றி

சுதந்திரக் கிண்ண சுற்றுத்தொடர் – நிகழ்ந்த சம்பவங்கள் குறித்து கவலை தெரிவிக்கும் பங்களாதேஷ்