விளையாட்டு

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரை கைது செய்ய உத்தரவு

(UTVNEWS|COLOMBO) – இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 15 நாட்களில் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்றால் கைது செய்ய அலிப்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முகமது ஷமியின் மனைவி ஹசின் ஜகான் அளித்த பேட்டியில், தனது கணவர் முகமது ஷமியும் அவரது சகோதரன் ஹசித் அகமதுவும் தன்னை துன்புறுத்தி வருவதாகவும், கணவரின் குடும்பத்தார், தன்னை கொலை கூட முயற்சித்ததாகவும் கூறியிருந்தார்.

இந்நிலையில், கடந்த வருடம் மார்ச் மாதம் கொல்கத்தாவில் உள்ள லால்பசார் பொலிஸ் நிலையத்தில் ஷமி மற்றும் அவரது சகோதரன் ஹசித் அகமது மீது ஹசின் ஜகான் முறைப்பாடு அளித்துள்ளார். இது தொடர்பாக முகமது ஷமி மற்றும் அவரது சகோதரர் நீதிமன்றத்தில் ஆஜராக நீதிபதி பலமுறை உத்தரவிட்ட போதும் இருவரும் ஆஜராகவில்லை.

இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை நேற்று நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது வழக்கில் ஆஜராகாத இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி மற்றும் அவரது சகோதர் ஹசித் அகமது இருவருக்கும் கைது செய்வதற்கான பிடியானை பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும், அடுத்த 15 நாட்களுக்குள் முகமது ஷமி மற்றும் அவரது சகோதரர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்றால் அவர்களை கைது செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.

மேற்கிந்திய தீவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியில் இடம் பெற்றுள்ள முகமது ஷமி தற்போது அந்த அணிக்கு ஏதிராக நடைபெற்றுவரும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரருக்கான விருது பாபர் அசாமுக்கு

இலங்கை லெஜண்ட்ஸ் அணி முதலில் களத்தடுப்பு

இரண்டாம் நாள் ஆட்டம் ஆரம்பம்!