(UTVNEWS|COLOMBO) – கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை எந்த அணியும் அடையாத சாதனையை இலங்கை கிரிக்கெட் அணி படைத்துள்ளது.
குறித்த சாதனையை இலங்கை கிரிக்கெட் அணி தனது பந்து வீச்சில் அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நேற்று கண்டி – பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நியூஸிலாந்து அணியுடன் நடைபெற்ற இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் இரண்டு வீக்கெட்டுக்களை வீழ்த்தியதன் மூலம் இந்த சாதனை நிலைநாட்டப்பட்டுள்ளது.
லசித் மாலிங்க நிலைநாட்டிய இந்த சாதனையை அடுத்து, பந்து வீச்சு சாதனையாளர்கள் அனைவரும் இலங்கை கிரிக்கெட் அணியை பிரதிநிதித்துவப்படுத்துகின்றமை விசேட அம்சமாகும்.
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிகூடிய விக்கெட்களை பெற்றுக் கொண்டவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரராக இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் திகழ்கின்றார்.
சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் முத்தையா முரளிதரன் 534 விக்கெட்களையும் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 800 விக்கெட்டுகளை பெற்று உலகில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அதிகூடிய விக்கெட்களை பெற்ற சாதனையாளராக முத்தையா முரளிதரன் திகழ்கின்றார்.
இதன் மூலம் உலக கிரிக்கெட் அரங்கில் மூன்று வகையான போட்டிகளிலும் அதிக விக்ெகட்டுகளை வீழ்த்திய பந்து வீச்சாளில் இலங்கை பந்து வீச்சாளர் உள்ளமை குறிப்பிடத்தக்கது.