சூடான செய்திகள் 1

கல்வி அமைச்சருக்கு ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு

(UTVNEWS|COLOMBO) – கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

பாடசாலை பாடப்புத்தகங்கள் அச்சிடுவதில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடிகள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடு குறித்து சாட்சி வழங்குவதற்காக இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளார்.

அதன்படி, எதிர்வரும் மாதம் 08ஆம் திகதி அகில விராஜ் காரியவசத்தை ஆணைக்குழுவில் முன்னிலையாகி சாட்சியம் வழங்குமாறு நேற்று அறிவித்தல் விடுக்கப்பட்டதாக அந்த ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

மேலும், எதிர்வரும் மாதம் முதலாம் திகதி காலை 9.30க்கு மேற்படி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் முன்னிலையாகி வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொடுக்குமாறும் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்திற்கு ஜனாதிபதி ஆணைக்குழுவால் அறவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பாதீடு தொடர்பான யோசனைக்கு அமைச்சரவையால் அனுமதி

கொஸ்கொட சுஜிவவை கைது செய்ய நீல எச்சரிக்கை

ICN சம்பியன் போட்டியில் இலங்கைக்கு பதக்கம்