சூடான செய்திகள் 1வணிகம்

S1 உடன் இலங்கை சந்தையில் அறிமுகமாகும் vivo S வரிசை

vivo தனது புத்தம் புதிய S வரிசையின் இன் முதல் ஸ்மார்ட் போனான S1 ஐ சந்தைக்கு அறிமுகப்படுத்தியுள்ளதுடன், இது 32MP AI Selfie Camera மற்றும் AI Triple Rear Camera ஆகிய சிறப்பம்சங்களைக் கொண்டது. பிராந்தியத்தில் உள்ள முன்னணி ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர் என்ற வகையில், vivo mobile தனது S1 ஐ மிலேனியல் இளைஞர்கள் மற்றும் அவர்களது ஸ்டைலான, ஆற்றல்மிக்க மற்றும் நவநாகரீகத்துக்கு ஏற்ற வகையில் கவர்ச்சி மற்றும் மதிப்புமிக்க ஸ்மார்ட்போனாக வகைப்படுத்துகின்றது.

ஸ்டைலான இளைஞர்களுக்கு ஏற்ற வகையில், வீடியோ பார்வையிடும் போது, படங்களை பிடிக்கும்போது அல்லது இணைய பாவனையின் போது முழுமையான பயனர் அனுபவத்தைத் தரும் துள்ளியமான, பிரகாசமான மற்றும் இயற்கையான நிறங்களைக் கொண்ட super AMOLED Halo Full View Display திரையையும் இந்த அதி நவீன வடிவமைப்பைக் கொண்ட vivo S1 கொண்டுள்ளது.

“நுகர்வோருக்கு முன்னுரிமையளிக்கும் மூலோபாயத்தை உபயோகிப்பதையொட்டி vivo mobile பெருமையடைகின்றது. எமது நுகர்வோரில் வளர்ந்து வரும் பிரிவு இளம் பயனர்கள் என்பதனால் நுகர்வோர் அனுபவத்தை மேம்படுத்த பாய்ச்சலொன்று அவசியமென நாம் நம்புகின்றோம்.

இதனையே S வரிசை ஸ்மார்ட்போன்கள் மூலம் நாம் அடைய எதிர்ப்பார்க்கின்றோம். முதற்தர ஸ்மார்ட்போன்களுக்கு இணையான சிறப்பம்சங்களைக் கொண்ட ஸ்டைலிஷ் ஸ்மார்ட் போன்கள் மீது ஆர்வம் கொண்ட நுகர்வோரின் கோரிக்கைகளை பூர்த்தி செய்யும் எமது முயற்சிகளை இது எதிரொலிக்கின்றது. vivo S1 ப்ரீமியம் தோற்றம் கொண்டதுடன், முதற்தர ஸ்மார்ட்போன்களுக்கு இணையான செயற்பாட்டைக் கொண்டதென,” என பிரதான நிறைவேற்று அதிகாரி கெவின் ஜியாங் தெரிவித்தார்.

“இளவயதினர் மற்றும் ஸ்டைலிஷானவர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ள vivo S1, 2.5D நுட்பத்தைக் கொண்டதுடன் இது முதற்தர தயாரிப்புகளுக்கு இணையான பயனர் அனுபவத்தைத் தருகின்றது. வெளிப்புறம் நுட்பமாக வளைந்த பக்க முகப்புக்களைக் கொண்டுள்ளதுடன், இது கையில் வைத்திருப்பதை எளிதாக்குகிறது. புதுமையான in-display fingerprint தொழில்நுட்பமானது, இலங்கை சந்தையில் இதே பிரிவில் விற்பனைக்குள்ள போட்டியாளர்களின் ஸ்மார்ட் போன்களை விட மூன்று மடங்கு வேகமானது,” என ஜியாங் தெரிவித்தார்.

ஸ்டைலிஷான செல்பி ஆர்வம் கொண்டவர்களுக்கு ஏற்ற AI செல்பி கெமராவுடன் கூடிய புதிய vivo S1 தனிச்சிறப்பு வாய்ந்த தொழில்நுட்ப அம்சங்கள் பலவற்றைக் கொண்டுள்ளதுடன், இது vivo mobile இன் மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் புத்துருவாக்கத்துக்கு சான்றாக இருக்கின்றது..

நீலம் மற்றும் ஊதா கலவையான நிறம் மற்றும் வைரம் போன்ற வடிவமைப்புடன் vivo S1 கிடைப்பதுடன் இது சிறந்த கைவினைத்திறனைக் காட்டும் நவீன வடிவமைப்பாகும். அதேபோல் கறுப்பு நிறத்திலான வைரம் போன்ற வடிவமைப்பானது இரவு வானையும், மின்னும் நட்சத்திரங்களையும் ஒத்ததாக உள்ளது. vivo இன் Dual-Engine Fast Charging தொழில்நுட்பத்துடன் vivo S1 வருவதால் மின்கல சக்தி தீர்ந்து விடுமோ என்று கவலையிலிருந்து வாடிக்கையாளர்களை விடுவிக்கின்றது. vivo’s Funtouch OS 9.0 ஆனது S1 இற்கு புத்தம் புதிய UI design, dark mode, customizable icons உள்ளிட்ட மேலும் பல அம்சங்களை வழங்குகின்றது.
புதிய மெல்லிய மற்றும் ஸ்டைலிஷ் vivo S1 ஓகஸ்ட் 2019 முதல், ரூபா 52,990.00 என்ற விலைக்கு ஒரு வருட உத்தரவாதத்துடன், இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் EMI அனுமதியுடன், நாடுபூராகவும் உள்ள vivo முகவர்களிடமிருந்து நுகர்வோர் கொள்வனவு செய்ய முடியும்.
vivo S1 சிறப்பம்சங்கள்
• Display: 6.38 inches , Super AMOLED Halo FullViewTM Display
• Processor: MT6768 (P65)
• Front Camera: 32 Megapixel (AI)
• Rear Camera: 16 Megapixel + 8 Megapixel + 2 Megapixel (AI)
• RAM: 6GB inbuilt RAM
• Storage: Super Big 128GB ROM
• Battery: 4500mAh with vivo’s Dual-Engine Fast Charging Technology
• OS: Funtouch OS 9.0
• Screen Resolution: 1080×2340 (FHD+)

vivo தொடர்பில்

vivo ஒரு முன்னணி உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனமாகும், இது ஸ்மார்ட் மொபைல் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை மேம்படுத்த உறுதிபூண்டுள்ளது.

vivo ஒரு துடிப்பான மொபைல் இணையச் சுழல் அமைப்பை உருவாக்குவதில் அர்ப்பணிப்புடன் உள்ளது, மேலும் தற்போது சான் டியாகோ, ஷென்சென், நாஞ்சிங், பெய்ஜிங், ஹாங்க்சோ மற்றும் தாய்பே ஆகிய நாடுகளில் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மையங்களுடன் விரிவான ஆராய்ச்சி நடவடிக்கைகளின் வலையமைப்பை சொந்தமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

இந்த மத்திய நிலையங்கள் 5ஜி, AI , மொபைல் புகைப்படம் மற்றும் அடுத்த தலைமுறை ஸ்மார்ட்போன் வடிவமைப்பு உள்ளிட்ட அதிநவீன நுகர்வோர் தொழில்நுட்பங்களின் வளர்ச்சியில் கவனம் செலுத்துகின்றன.

vivo சீனா, தெற்காசியா மற்றும் தென்கிழக்கு ஆசியா முழுவதும் உலகம் முழுவதும் ஐந்து உற்பத்தி தளங்களை அமைத்துள்ளது. vivo உலகளாவிய ரீதியில் 18 சந்தைகளில் தனது பிரசன்னத்தைக் கொண்டுள்ளதுடன், உலகளவில் 1,000 க்கும் மேற்பட்ட நகரங்களில் சில்லறை விற்பனை நிலையங்களில் கிடைக்கப்பெறுகின்றது.

Related posts

இன்று முதல் அனுமதி

இரண்டாம் கட்ட திருத்தப்பணிகள் நாளை முதல்

சுதந்திர தின ஒத்திகை நடவடிக்கைகள் இன்றைய தினம் இடம்பெறாது