(UTVNEWS|COLOMB0)- இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க இருபதுக்கு – 20 போட்டிகளில் 99 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது 20க்கு20 போட்டியானது கண்டி பல்லேகல மைதானத்தில் நடைபெற்றது
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்து 174 ஓட்டங்களை பெற்றது.
அணியின் சார்பில் அதிகபட்சமாக குசல் மெண்டிஸ் 79 ஓட்டங்கள் பெற்றிருந்தார்.
ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து 175 ஓட்டங்களை எடுத்திருந்தது. இலங்கை அணி சார்பில் லசித் மாலிங்க மற்றும் வாணிது ஹசரங்கா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தனர்.
இதன்மூலம் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க 74 போட்டிகளில் 99 விக்கெட்டுகளை வீழ்த்தி, இருபது ஓவர் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த பாகிஸ்தான் வீரர் ஷாகித் அப்ரிடியின் சாதனையை முறியடித்துள்ளார்.
சர்வதேச இருபதுக்கு – 20 போட்டிகளில் அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றிய வீரர்கள்:
1. இலங்கை – லசித் மலிங்க 99 விக்கெட்
2. பாகிஸ்தான் – ஸஹித் அப்ரிடி 98 விக்கெட்
3. பங்களாதேஷ் – சஹிப் அல்ஹசன் 88 விக்கெட்
4. பாகிஸ்தான் – உமார் குல் 85 விக்கெட்
5. பாகிஸ்தான் – சஹிட் அஜ்மல் 85 விக்கெட்