சூடான செய்திகள் 1

SLPP யின் வேட்பாளர் தொடர்பில் மஹிந்த கருத்து

(UTVNEWS|COLOMBO) – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவு கிடைக்கும் என எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

சர்வதேச மாணிக்கல் மற்றும் தங்காபரண காண்காட்சி கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது இதனை கூறினார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், பொதுஜன பெரமுனவின் தெரிவு செய்த ஜனாதிபதி வேட்பாளரை எந்தவொரு சந்தர்பத்திலும் மாற்ற போவது இல்லை. பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரை சரியான நேரத்தில் அறிவித்தாகவும் அவர் கூறினார்.

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் நிலவும் நெருக்கடி நிலைமையினால் அந்த கட்சியால் இதுவரை வேட்பாளரை பெயரிட முடியாதுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

களுத்துறையில் இன்று 12 மணிநேர நீர்வெட்டு

சீன சிகரெட்டுக்கள் குறித்து மங்கள விளக்கம்

மஹாநாம மற்றும் திஸாநாயக்க ஆகியோர் பிணையில் விடுதலை