(UTVNEWS|COLOMBO) – 2018/2019 கல்வி ஆண்டுக்காக பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படும் மாணவர்களை உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் தொல்லைக்கு உட்படுத்துபவர்கள் உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என உயர் கல்வி அமைச்சின் செயலாளர் எம்.எம்.ரி.கே.மாயாதுண்னே தெரிவித்துள்ளார்.
மேலும் பகிடிவதைக்கு தொடர்புபட்ட மாணவர்கள், இந்த செயற்பாட்டிற்கு உதவி ஒத்தாசை வழங்கும் பல்கலைக்கழக நிர்வாகத்தினரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
கொடூர பகிடிவதைக்கு எதிராக சட்டத்தில் உள்ள விதிகள் கடுமையானது எனவும் 10 வருட சிறைத்தண்டனையும் வழங்க முடியும் எனவும் செயலாளர் சுட்டிக்காட்னார்.
பொலிஸ் ஆணைக்குழு மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியதுடன் அவர்கள் முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்குவதாக தெரிவித்திருப்பதாகவும் உயர் கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.