சூடான செய்திகள் 1

மெகா கூட்டணி, ஜனாதிபதி வேட்பாளர் நாளை மறுதினம்

ஜனாதிபதி வேட்பாளர், மெகா கூட்டணி தொடர்பிலான உடன்படிக்கையில் கைச்சாத்திடும் தினங்கள் குறித்த கால அட்டவணையை நாளை மறுதினம் சனிக்கிழமை உத்தியோகபூர்வமாக அறிவிப்பதாக ஐ.தே.கவின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பங்காளிக் கட்சி தலைவருக்கு உறுதியளித்துள்ளார்.

நேற்றுமுன்தினம் இரவு அலரி மாளிகையில் ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கின்ற பங்காளிக் கட்சிகளின் தவைர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று நடைபெற்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் வார இறுதிக்குள் அறிவிக்கப்படுமென கட்சியின் தலைவரும், பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க உறுதிபடத் தெரிவித்ததாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

இதேவேளை, ஐ.தே.முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் நியமனம் மற்றும் கூட்டணியை அமைக்கும் தினங்கள் தொடர்பான கால அட்டவணையை எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் வழங்குவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார். தீர்க்கமான முடிவுகள் எவையும் எட்டப்படவில்லை. எனினும் ஜனாதிபதி வேட்பாளர் விடயம் தொடர்பாக முக்கிய அவதானம் செலுத்தப்பட்டது என அமைச்சர் மனோகணேசன் தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் ஐ.தே.க. அரசின் பங்காளிக் கட்சித் தலைவர்களாகவுள்ள அமைச்சர்களான மனோகணேசன், ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியுதீன், ராஜித சேனாரட்ண, சம்பிக்க ரணவக்க மற்றும் ஐ.தே.கவின் சிரேஷ்ட தலைவர்கள் சிலரும் கலந்துகொண்டனர்.

Related posts

இடியுடன் கூடிய மழை

பாராளுமன்றம் கலைக்கப்படுகின்றது

அறிக்கைகள் வெளியிடப்படும் போது நேர்மைத்தன்மையும், பொறுப்புணர்வும் இருக்கவேண்டும்.