சூடான செய்திகள் 1

பிணைமுறி குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை

(UTVNEWS|COLOMBO) – பிணைமுறி குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரிய துறையினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

பிணைமுறி குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை ஆணைக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுடன் நேற்று(28) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

மேலும் குறித்த விசாரணை நடவடிக்கைகளை துரிதப்படுத்தி குற்றவாளிகளுக்கு எதிராக விரைவில் நடவடிக்கை எடுக்குமாறும் பணிப்புரை விடுத்துள்ள ஜனாதிபதி, இவ்விசாரணைகள் தாமதமடைதல் நீதி நிலைநாட்டப்படுவதற்கு தடையாகும் எனக் குறிப்பிட்டார்.

இவ்விடயம் தொடர்பிலான நான்கு இடைக்கால அறிக்கைகள் இதுவரை கிடைக்கப் பெற்றுள்ளதுடன், எதிர்வரும் டிசம்பர் மாதமளவில் ஏனைய அறிக்கைகளையும் முன்வைக்க முடியும் என இதன்போது தெரிவிக்கப்பட்டது.

Related posts

மர ஆலை பதிவு குறித்த வர்த்தமானி அறிவித்தல் ஒரு மாதத்திற்குள்.

10 லட்சம் மரக்கன்றுகளை நட திட்டம்…

படைப் பிரிவு பிரதானியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா