சூடான செய்திகள் 1

நாட்டின் பெரும்பாலான பகுதிகளுக்கு 100-150 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி

(UTVNEWS|COLOMBO) – நாட்டின் தென்மேற்கு பிரதேசத்தில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலையில் ஓகஸ்ட் 30ஆம் திகதி வரை மேலும் அதிகரிப்பு ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

நாடு முழுவதும் மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது

மேல், மத்திய சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நுவரெலியா, இரத்தினபுரி, கேகாலை, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் 100-150 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும்பொலன்னறுவை மாவட்டத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

Related posts

அரச வங்கி ஒன்றில் கொள்ளை

விலைமதிப்பற்ற கஜமுத்துக்களுடன் நால்வர் கைது

நாமல் ராஜபக்ஷ குற்றப் புலனாய்வுத் திணைக்கள முன்னிலையில்