சூடான செய்திகள் 1

பயங்கரவாத சந்தேக நபர்கள் இருவரையும் தடுத்து வைத்து விசாரணை செய்ய நடவடிக்கை

(UTVNEWS | COLOMBO) –  அம்பாறை பகுதியில் கைது செய்யப்பட்ட பயங்கரவாத சந்தேக நபர்கள் இருவரையும் 72 மணித்தியாலங்களுக்கு தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

தடை செய்யப்பட்ட தேசிய தௌஹித் ஜமாத் மற்றும் ஜமாத் ஈ மில்லது இப்ராஹிம் அமைப்புடன் தொடர்புடைய இருவர் நேற்று(27) கைது செய்யப்பட்டிருந்தனர்.

அரச புலனாய்வு சேவை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய சந்தேகநபர்கள் நேற்று(27) கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.

அபு அனாஸ் என அழைக்கப்படும் மொஹமட் ரைசுதீன் அப்துல் ரஹ்மான் மற்றும் அபுராவா என அழைக்கப்படும் செய்னுல் ஆப்தீன் ஹஸ்ல ஆகிய இருவரே நேற்றைய தினம் கைது செய்யப்பட்டிருந்தனர்.

சந்தேகநபர்கள் இருவரும் நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டையில் ஆயுதப் பயிற்சி பெற்றவர்கள் என்பது தெரியவந்துள்ளது

Related posts

20 வது அரசியலமைப்பு சீர்திருத்த யோசனை சமர்பிக்கப்பட்டது

பாராளுமன்றம் சற்று முன்னர் கூடியது

சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிரான தேசிய தினம் இன்று அனுஷ்டிப்பு