சூடான செய்திகள் 1

தேசிய மருத்துவ நிறுவனத்தின் மாணவர்கள் சிலர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

(UTVNEWS|COLOMBO) – கொழும்பு பல்கலைக்கழகத்தின் தேசிய மருத்துவ நிறுவனத்தின் மாணவர்கள் சிலர் இன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றினை பதிவு செய்துள்ளனர்.

ராஜகிரியவில் அமைந்துள்ள ஆண்களுக்கான விடுதியிலிருந்து மாணவர்கள் முன்னறிவித்தலின்றி அகற்றப்பட்டமைக்கு எதிராகவே முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளனர்.

அத்துடன் குறித்த பிரிவின் மாணவர்கள் தங்கியுள்ள விடுதி பாதுகாவலரின் நடவடிக்கையினால் பாரிய இன்னல்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

வெடிப்புச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த லொறி சிக்கியது

புதிய தலைமையை முன்னிறுத்த தயார்

விபத்தில் ஒருவர் பலி