கிசு கிசு

அவுஸ்திரேலியாவின் வெற்றி கனவை பறித்த பென் ஸ்டோக்ஸ்

(UTVNEWS|COLOMBO) – அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து அணி ஒரு விக்கெட்டினால் வெற்றிபெற்றுள்ளது.

நியூசிலாந்துக்கு எதிரான 2019 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது போன்ற அதே பாணியில் துடுப்பெடுத்தாடிய பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து அணியை வெற்றிபெறச் செய்தார்.

தோல்வியை நெருங்கிய நிலையில் கடைசி விக்கெட்டுக்கு தனியே சிக்ஸர்கள் மற்றும் பௌண்டரிகளை விளாசியதன் மூலம் இங்கிலாந்து அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஹெடிங்லியில் நடைபெற்ற இந்த டெஸ்ட் போட்டியின் நான்காவது நாளான நேற்று(25) இங்கிலாந்து அணிக்கு 359 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

ஆடுகளத்தில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பென் ஸ்டோக்ஸ் இறுதியாக களமிறங்கிய ஜேக் லீச்சுடன் இணைந்து வெற்றிக்காக போராடினார்.

ஆறு ஓட்டங்களையும், நான்கு ஓட்டங்களையும் விளாசிய அவர் 121.1 ஓவரில் டெஸ்ட் அரங்கில் தனது 8 ஆவது சதத்தை பூர்த்தி செய்தார். அது மாத்திரமன்றி அந்த ஓவரில் மாத்திரம் இங்கிலாந்து அணி 19 ஓட்டங்களை பெற்றது.

இதனால் இங்கிலாந்தின் வெற்றிக்கு ஒரு விக்கெட் மாத்திரம் கையிருப்பில் இருக்க 18 ஓட்டம் தேவைப்பட்டது. தனது பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பென் ஸ்டோக்ஸ் 125.4 ஆவது ஓவரில் மேலும் ஒரு நான்கு ஓட்டத்தை விளாசி இங்கிலாந்து அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தார்.

ஆடுகளத்தில் இறுதிவரை ஆட்டமிழக்காதிருந்த பென் ஸ்டோக்ஸ் 11 நான்கு ஓட்டம் 8 ஆறு ஓட்டம் அடங்கலாக 135 ஓட்டத்துடனும், ஜேக் லீச் ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

பந்து வீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பில் ஹேசல்வூட் 4 விக்கெட்டுக்களையும், நெதன் லியோன் 2 விக்கெட்டுக்களையும் பேட் கம்மின்ஸ் மற்றும் ஜேம்ஸ் பேட்டின்சன் ஆகியோர தலா ஒவ்வொரு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலம் தொடர் 1:1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

Related posts

இராஜ் போன்று கவுன் அணியும் உரிமை எல்லா ஆண்களுக்கும் உண்டு

நாமல்குமார ஒரு பைத்தியக்காரன் – சபையில் பொன்சேகா

ரஞ்சனுக்கு மன்னிப்புகள் இல்லை : தொடர்ந்தும் சிறைக்கம்பிகள் இடையே..