(UTVNEWS|COLOMBO) – எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ள நியூசிலாந்து அணிக்கெதிராக மூன்று போட்டிகளைக் கொண்ட டி-20 தொடரில் இருந்து இலங்கை கிரிக்கெட் அணியின் வீரரான அஞ்செலோ மெதிவ்ஸுக்கு ஓய்வு வழங்குவதற்கு தேர்வுக் குழு நடவடிக்கை எடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில், மெதிவ்ஸுக்கு ஓய்வு அளிக்கப்பட்டதாக தனக்கு இதுவரை எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை என விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, தெரிவித்துள்ளார்.
போர்மில் உள்ள அவரை டி-20 அணியில் இருந்து நீக்குவது ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்தார்.
எதுஎவ்வாறாயினும், எனக்கு இதுவரை டி-20 தொடருக்கான உத்தேச குழாத்தின் பெயர் கடிதம் கிடைத்தவுடன் பார்ப்போம். ஆனாலும், அஞ்செலோ மெதிவ்ஸ் தற்போது போர்மில் இருப்பதால் அவரை கட்டாயம் அணியில் இணைத்துக்கொள்ள வேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
எனவே மெதிவ்ஸ் தற்போது போர்மில் இருப்பதால் நிச்சயம் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.
இதேவேளை, நியூசிலாந்து அணிக்கெதிரான டி-20 தொடரில் லசித் மாலிங்க விளையாடுவாரா என்பது தொடர்பில் இதுவரை உறுதியாகாத நிலையில், இலங்கை அணியை நிரோஷன் டிக்வெல்ல அல்லது குசல் ஜனித் பெரேரா வழிநடத்தலாம் என கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.