சூடான செய்திகள் 1

இன்றும் பல பகுதிகளில் மழை பெய்யக் கூடிய சாத்தியம்

(UTVNEWS|COLOMBO) – நாட்டின் தென்மேற்கு பிரதேசத்தில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலையில் அடுத்த சில நாட்களில் மேலும் தொடரும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும், குறிப்பாக வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் தற்போது காணப்படும் காற்று நிலைமை அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன்

மேல், மத்திய, சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வடக்கு மாகாணத்திலும் பதுளை மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகமான பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதுடன் மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லி மீட்டருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

Related posts

குமார வெல்கமவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு…

இன்று பிரதமருடன் விஷேட கலந்துரையாடல்

UPFA உறுப்பினர்கள் இன்னும் UPFA இல் அங்கம் வகிப்பதாக அறிவிப்பு