(UTVNEWS|COLOMBO) – பல கோரிக்கைகளை முன்வைத்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நேற்று(22) காலை மேற்கொண்ட ஒருநாள் அடையாள பணிப்புறக்கணிப்பு இன்று(23) காலை 8 மணியுடன் நிறைவுக்கு வந்துள்ளது.
மருந்துப்பொருள் தட்டுப்பாடு, மருத்துவ கல்விக்கான தரம் பேணப்படாமை, தகுதிபெற்ற வைத்திய பட்டதாரிகளுக்கான நியமனங்கள் தாமதிக்கின்றமை உள்ளிட்ட எட்டு கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் மேற்கொள்ளப்படுகிறது.
எனினும் தங்களது கோரிக்கைகளுக்கு இரண்டு வாரங்களுள் உரிய தீர்வு கிடைக்கப்பெறாத பட்சத்தில், மீண்டும் போராட்டத்தை நடத்தவிருப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.