(UTVNEWS|COLOMBO) – முப்படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவின் பதவிக்காலம் 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை ஜனாதிபதியால் நீடிக்கப்பட்டுள்ளது.
2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22ம் திகதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
அவரது பதவிக்காலம் நேற்று நிறைவடைந்த நிலையில், மீண்டும் அவரது பதவிக்காலம் டிசம்பர் மாதம் 31ம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.