கிசு கிசு

ஐ.தே.கட்சியினால் சஜித் முன்மொழியப்பட்டால் TNA ஆதரவு அநுர திசாநாயக்கவுக்கு..

(UTVNEWS | COLOMBO) – எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் பொது வேட்பாளராக சஜித் பிரேமதாச பெயரிடப்படுமாயின் தமிழ் தேசியக் கட்சியின் ஆதரவு தொடர்பில் ஆழமாக தீர்மானிக்க வேண்டிய நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் சஜித் பிரேமதாசவின் நிலைப்பாட்டிலேயே குறித்த கட்சியின் இறுதித் தீர்மானமும் அமைந்துள்ளது.

எவ்வாறாயினும், சஜித் பிரேமதாச உடனான கலந்துரையாடல் தோல்வியடைந்தால் ஜேவிபி தலைவர் அநுர குமார திசாநாயக்கவுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

சஜித் பிரேமதாச இதுவரையில் தமிழ் மக்கள் பிரச்சினையில் மௌனியாக இருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

தேர்தலுக்கு முகங்கொடுக்க அரசாங்கம் பயப்படுகிறது?

சுதந்திர முன்னணியின் அதாவுத மற்றும் ஏகநாயக்க சஜித்திற்கு ஆதரவு [PHOTOS]

ரஷீத் கானின் மனைவி அனுஷ்கா ஷர்மாவா?