கேளிக்கைசூடான செய்திகள் 1

அமிதாப் பச்சனுக்கு 75% கல்லீரல் கெட்டுவிட்டது! ; அதிர்ச்சியில் ரசிகர்கள்

(UTVNEWS | COLOMBO) -பொலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்தக்கொண்டு தன் உடல் நிலைகுறித்து பேசிய கருத்துகள் அவரது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளதாவது,

“எனது உடல்நிலை குறித்து உங்களுடன் பகிர்ந்து கொள்வதன் மூலமாக உடல் பரிசோதனை விழிப்புணர்வை ஏற்படுத்தி, நீங்களும் உங்கள் உடல் நலன் குறித்து அறிந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன்.

நான் காசநோயில் இருந்து, ஹெப்பாடிட்டீஸ் காய்ச்சலில் இருந்து மீண்டு வந்துள்ளேன். கெட்ட ரத்தத்தின் காரணமாக எனது கல்லீரல் பாதிக்கப்பட்டது. ஆனால் 20 வருடங்கள் கழித்தே அதை நான் அறிய முடிந்தது என்பதால் எனக்கு 75% கல்லீரல் இப்போது கெட்டுவிட்டது. தற்போது 25% கல்லீரல் செயல்பாட்டுடன் தான் வாழ்ந்து வருகிறேன்.

இவை அனைத்திற்கும் தீர்வு உள்ளது. காசநோய்க்கு சிகிச்சை உள்ளது. எனக்கு காசநோய் இருக்கிறது என்பது எனக்கு 8 வருடங்களாகத் தெரியாமல் இருந்தது. எனவே நீங்களும் உங்களது உடலை சோதனை செய்து நோய் குறித்து அறிய விரும்பாதவரை உங்களால் அந்த நோய்க்கு தீர்வு காண முடியாது” என்று தெரிவித்துள்ளார். இந்த செய்தி நாடு முழுவதும் பரவியது ரசிகர்கள் பலர் இந்த செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Related posts

இலங்கையில் 9வது மரணமும் பதிவு

கருப்பின இளைஞர் கொலை சம்பவம்; அமெரிக்காவில் பதற்றம்

சட்டவிரோதமான முறையில் படகு மூலம் வெளிநாடு செல்ல இருந்த 12 பேர் கைது