சூடான செய்திகள் 1

பேலியகொடையில் பாரிய தீ விபத்து

(UTVNEWS|COLOMBO) – கொழும்பின் புறநகர் பகுதியான பேலியகொடையில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

போரனுகொட்டுவ பகுதியிலுள்ள வீட்டுத் தொகுதியில் நேற்றிரவு திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.அதற்கமைய உடனடியாக செயற்பட்ட பொலிஸார், தீயைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

பேலியகொடை பொலிஸார் மற்றும் கொழும்பு தீயணைப்பு பிரிவு அதிகாரிகள் இணைந்து தீயைக கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த தீ விபத்தில் உயிர் ஆபத்துக்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும் 14 வீடுகளுக்கு மாத்திரம் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளர்.

Related posts

காரும் டிப்பரும் நேருக்கு நேர் மோதி இரண்டு பேர் பலி

பாராளுமன்ற விசேட தெரிவுக் குழு முன்னிலையில் காத்தாங்குடி பொலிஸ் நிலைய அதிகாரி

தாடி விவகாரம் – மாணவர் நுஸைபுக்கு ஆதரவாக சாலிய பீரிஸ் ஆஜர்!