சூடான செய்திகள் 1

மீண்டும் ஐ.தே.க மீது அக்கறை கொண்ட ஜனாதிபதி: எதற்காக? இந்த திடீர் மாற்றம்

(UTVNEWS|COLOMBO) – ஐக்கிய தேசியக் கட்சியின் தற்போதைய நிலை, ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அக்கறையுடன் நேற்று கேட்டறிந்துள்ளார்.

பொதுஜன பெரமுனவின் வேட்பாளரான கோத்தபாய ராஜபக்சவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆதரவு வழங்க இணக்கம் தெரிவித்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தன. எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவுடனான சந்திப்பின் போது இந்த இணக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பில் சிறுபான்மையின அமைச்சர் ஒருவருடன் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அவ்வாறான எந்த இணக்கமும் இடம்பெறவில்லை என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையிலேயே ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி அக்கறை காட்டி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

Related posts

யானை ரயிலில் மோதி படுகாயம்…

ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

மூன்று இளைஞர்கள் கொலை வழக்கில் மொஹொமட் ரவூப் ஹில்மிக்கு மரண தண்டனை