சூடான செய்திகள் 1

பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வு

(UTVNEWS|COLOMBO) – பொலிஸ் கான்ஸ்டபிள் முதல் பொலிஸ் இன்ஸ்பெக்டர் வரையான பதவி உயர்வுகளை வழங்கும் நடைமுறைகள், திறைசேரியின் முகாமைத்துவ சேவைத் திணைக்களத்தினால் தயாரிக்கப்படுவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

பொலிஸ் திணைக்களத்தினால் பாதுகாப்பு அமைச்சின் ஊடாக திறைசேரியின் முகாமைத்துவ சேவைத் திணைக்களத்திடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய பொலிஸ் கான்ஸ்டபிள்களுக்கு பதவி உயர்வுகள் வழங்கப்படுவதாக நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், 31 500 பொலிஸ் கான்ஸ்டபிள்களுக்கு பதவி உயர்வுகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

85000க்கும் அதிகமானோரைக் கொண்ட செயலணியுடன், பொலிஸ் திணைக்களத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் முதல் பொலிஸ் இன்ஸ்பெக்டர் வரையான 31 540 அதிகாரிகள் பணிபுரிந்து வருகின்றனர்.

Related posts

ஹுங்கம துறைமுகத்தில் தீ

ஆனமாலு ரங்க கொலை : குடு ரொஷானின் சகோதரன் கைது

சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கையில் குறைவு…