(UTVNEWS|COLOMBO) -இலங்கையின் விஞ்ஞானிகள் குழுவினரால் புதிய கிரக மண்டலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆர்த்தர் சீ க்ளாக் மையம் தெரிவித்துள்ளது.
நாசாவின் கேப்ரல் டூ திட்டத்தின் கீழ் கண்டறியப்பட்ட நட்சத்திரக் கூட்டம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் போது இந்தப் புதிய கிரக மண்டலம் கண்டறியப்பட்டுள்ளதாக அந்த மையத்தின் பிரதிப் பணிப்பாளர் சிந்தன விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
கேப்ரல் டூ திட்டத்தின் கீழ் நட்சத்திரங்கள் தொடர்பில் பல்வேறு நாடுகளின் விஞ்ஞானிகள் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன.
இதற்கமைய, இலங்கையின் விஞ்ஞானிகள் குழு, கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் ஆய்வுகளை மேற்கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.