சூடான செய்திகள் 1

ஐ.தே.க தீர்மானமிக்க பேச்சுவார்த்தை நிறைவு: விபரம் உள்ளே

(UTVNEWS|COLOMBO) -கூட்டணி தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளும் நோக்கில் ஐக்கிய தேசிய முன்னணியின் கலந்துரையாடல் தற்சமயம் நிறைவடைந்துள்ளது.

கொழும்பில் அமைந்துள்ள அமைச்சர் ராஜித சேனாரட்னவின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

இதில் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரான அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், உபதலைவர் ரவி கருணாநாயக்க, ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

அத்துடன், அமைச்சர்களான மனோ கணேசன், ரவூப் ஹக்கீம், ராஜித சேனாரட்ன மற்றும் சம்பிக்க ரணவக்க ஆகியோர் இந்தச் சந்திப்பில் பங்கேற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் கலந்துரையாடலுக்கு பின்னர் அங்கிருந்து வெளியேறிய கட்சி தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் ஊடகங்களுக்கு எந்தவித கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை.

Related posts

முதலாம் தரத்திற்கு மாணவர்களை சேர்ப்பது குறித்த சுற்றறிக்கை இதோ!

இலங்கை – மாலைதீவு பாராளுமன்றங்களை ஒருங்கிணைக்க பேச்சுவார்த்தை

பொதுத் தேர்தல் திகதிக்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்யுமாறு கோரிக்கை