சூடான செய்திகள் 1

“நீரின்றி அமையாது உலகு” இந்திய சுதந்திர தின உரையில் திருக்குறளை தமிழில் பேசி மோடி(video)

(UTVNEWS|COLOMBO) – இந்தியாவின் 73ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றிவைத்த பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

அவருடைய உரையின் போது தண்ணீரின் அவசியத்தை உணர்த்தி பேசிய பிரதமர் நரேந்திர மோடி,”நீரின்றி அமையாது உலகு என தமிழில் பேசி அந்த திருகுறளுக்கான விளக்கத்தையும் விளக்கப்படுத்தினர்.

குறித்த திருக்குறளை தமிழில் பேசியமை குறிப்பிடத்தக்கதாகும்.

முன்னேற்றத்தை அடைய வேண்டுமென்றால் வறுமை ஒழிக்கப்பட வேண்டும். வறுமையில் உள்ளவர்கள் சவால்களை சமாளிக்கும் வழிகளை அறிந்தவர்கள்.

இன்றளவும் தண்ணீர் வசதி இல்லாத வீடுகள் உள்ளன, நீண்ட தூரம் நடந்து சென்று தண்ணீர் கொண்டு வரும் நிலைதான் உள்ளது. நாட்டு மக்கள் அனைவரது வீடுகளிலிலும் தண்ணீர் கிடைக்கும் வகையில் உருவாக்கப்பட்டது தான் ஜல் ஜீவன் மிஷன்.

பல ஆண்டுகளுக்கு முன் ஜெயின் முனிவர் தண்ணீர் விற்பனை செய்யப்படும் என்றார், அவரின் வாக்கு இப்போது பலித்துக் கொண்டு இருக்கிறது என குறிப்பிட்டார்.

Related posts

வைரஸை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன

கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கு இன்று ஆரம்பம்

பால்மா விலைக்கு புதிய சூத்திரம்…