சூடான செய்திகள் 1

ஐக்கிய தேசியக்கட்சியின் மூன்று முக்கிய தீர்மானம்

ஐக்கிய தேசியக்கட்சிக்கும் அதன் கூட்டுக்கட்சி இடையில் இடம்பெற்ற கூட்டத்தில் மூன்று முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இந்த கூட்டம் நேற்று முன் தினம் இடம்பெற்றுள்ளது.

இதன் போது ஜனநாயக தேசிய கூட்டணி அமைப்பதன் தாமதம் குறித்தும் வேட்பாளர் விவகாரம் குறித்தும் விரிவாக பேசப்பட்டுள்ளது. அதனடிப்படையிலேயே வேட்பாளர் விவகாரம் குறித்தும் ஜனநாயக தேசிய முன்னணி குறித்தும் மூன்று முக்கிய தீர்மானங்கள் இந்தக்கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளன.

ஜனநாயக தேசிய கூட்டணி தொடர்பில் இறுதித்தீர்மானம் எடுக்கப்படவுள்ளதுடன் இந்தக் கூட்டணி தொடர்பாக நாட்டுக்கு அறிவிக்கும் திகதியும் அன்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்படும்.

இந்தக் கூட்டத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், அதன் பிரதி தலைவர் பி. திகாம்பரம், முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் , ஐ.தே.க. பிரதித்தலைவர் சஜித் பிரேமதாஸ, மற்றும் அமைச்சர்களான அகில விராஜ் காரியவசம், ரவி கருணாநாயக்க, ராஜிதசேனாநாயக்க உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Related posts

எண்ணெய் தாங்கி பாரவூர்திகளின் சாரதிகள் பணிப்புறக்கணிப்பில்

வெசாக் வலயம் இன்றுடன் நிறைவு

தாடியுடன் பரீட்சை எழுத நீதிமன்றம் உத்தரவு!