சூடான செய்திகள் 1விளையாட்டு

இலங்கையில் பாதுகாப்பு சிக்கல் இல்லை – சங்கக்கார உறுதி

(UTVNEWS|COLOMBO) – உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தொடர்ந்து கிரிக்கெட்டை இலங்கை போன்ற நாடுகளில் மீண்டும் கட்டியெழுப்புவதற்கு ஆதரவளிப்பது மிகவும் முக்கியமானது இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், எம்.சி.சி கழகத்தின் தலைவருமான குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.

எனவே, இலங்கையில் தற்போது பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், இங்கிலாந்து அணியை அடுத்த வருடம் இலங்கைக்கு வந்து விளையாடுமாறும் கோரிக்கை விடுத்தார்.

இந்த கோரிக்கையை மெர்லிபோர்ன் கிரிக்கெட் கழகத்தின் வருடாந்தப் பொதுக்கூட்டம் (MCC World Cricket committee) வைத்து எம்.சி.சி கழகத்தின் தலைவர் சங்கக்கார தெரிவித்துள்ளார்

இக் கூட்டத் தொடர் கடந்த 11 ஆம், 12 ஆம் திகதிகளில் லோர்ட்ஸ் மைதானத்தில் இடம்பெற்றது.

இதன்போது, ஐ.சி.சி இன் டெஸ்ட் சம்பியன்ஷிப், இம்முறை உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் நடுவர் வழங்கிய தீர்ப்பு, 2022 பொதுநலவாய விளையாட்டு விழாவில் பெண்களுக்கான கிரிக்கெட்டை இணைத்துக் கொள்ளல், 2028 லொஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட்டை இடம்பெறச் செய்வது மற்றும் ஸ்மார்ட் பந்துகளை சர்வதேசப் போட்டிகளில் பயன்படுத்துவது உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கூடிய அவதானம் செலுத்தப்பட்டது.

இதன் போது, இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடுவதில் பாதுகாப்பு சிக்கல் எதுவும் இல்லையென குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.

Related posts

மன்னார் கடல் பகுதியில் அரிய வகை கடல் வாழ் பசு கரை ஒதுங்கியது.

நீதிமன்றத்தின் உதவியை கோரவுள்ள பொன்சேகா

சரத் வீரசேகரவின் தமிழர்களுக்கு எதிரான இனவாத போக்கு : உக்கிரமடையும் எதிர்ப்பு