விளையாட்டு

முதல் நாள் முடிவில் 203 ஓட்டங்களை பெற்றது நியூஸிலாந்து

(UTVNEWS|COLOMBO) – இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதலாம் நாள் ஆட்ட நிறைவில் நியூஸிலாந்து அணி 5 விக்கெட்டுக்களை இழந்து 203 ஓட்டங்களை குவித்துள்ளது..

இன்றைய தினம் காலியில் ஆரம்பமான டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தது.

நியூஸிலாந்து அணி சார்பில் ஜீட் ரவல் 33 ஓட்டத்துடனும், டோம் லெதம் 30 ஓட்டத்துடனும், கேன் வில்லியம்சன் எதுவித ஓட்டமின்றியும், ஹென்றி நிக்கோலஷ் 42 ஓட்டத்துடனும், வெல்டிங் ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழக்க ரோஸ் டெய்லர் 86 ஓட்டத்துடனும், மிட்செல் செண்டனர் 8 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

இலங்கை அணியின் பந்துவீச்சில் அகில தனஞ்சய 57 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.

நாளை போட்டியின் இரண்டாம் நாளாகும்.

Related posts

பாகிஸ்தான் அணியின் சிரேஷ்ட வீரருக்கு பந்துவீச தடை

ஐஸ் கிரிக்கெட் போட்டியில் இலங்கை வீரர்கள்

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளரானார் சனத் ஜயசூரிய

editor