சூடான செய்திகள் 1

காற்றின் வேகம் 65-70 வேகமாக அதிகரிக்ககூடும்

(UTVNEWS|COLOMBO) – மேற்கு தெற்கு சப்ரகமுவ வடக்கு வடமத்திய மத்திய மாகாணங்களின் சில பகுதிகளிலும் திருகோணமலை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் மணிக்கு 60 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

குறித்த பகுதிகளில் மாலை மற்றும் இரவு வேளைகளில் காற்றின் வேகம் 65-70 வேகமாக அதிகரிக்ககூடும் என அத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

மேலும், பொத்துவில் முதல் ஹம்பாந்தோட்டை கொழும்பு புத்தளம் மற்றும் காங்கேசன்துறை ஊடாக செல்லும் திருகோணமலை வரையான கடற்பகுதிகளில் வீசும் காற்றின் வேகம் 70-80கிலோமீற்றராக அதிகரிக்ககூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மண்சரிவு அபாய எச்சரிக்கை

ஸ்ரீ ரங்கா உள்ளிட்ட ஆறு பேரை கைது செய்யுமாறு உத்தரவு

பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகள் இன்று முதல் வழமைக்கு